திரைச்செய்திகள்

நடிப்பு, பாட்டு, இசையமைப்பு, கதையமைப்பு, இயக்கம் எனப் பன்முகத் திறமைகள் கொண்டவர் சிம்பு.

பல்வேறு சொந்தப் பிரச்சினைகள் காரணமாக 3 ஆண்டுகளாகப் படங்களில் நடிக்காமல் இருந்த அவர், வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமட்சி தயாரிப்பில் ‘மாநாடு’ படத்தில் நடிக்கத் தொடங்கினார். பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் இந்தப் படத்தில், வில்லால எஸ் ஜே சூர்யா, கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்து வந்தனர். சுமார் 5 ஆயிரம் துணை நடிகர்கள் கலந்துகொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த இடைவேளையில் ‘ஈஸ்வரன்’ என்ற படத்தில் நடித்து முடித்தார் சிம்பு. தற்போது மீண்டும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.

மாநாடு திரைப்படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்தின் பெயர் அப்துல் காலிக் என்பதாகும். இந்நிலையில் படத்தின் முதல் தோற்றம் குறித்த முக்கியமான அறிவிப்பினை சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். அதில் தன்னை சுற்றி பெரும் கலவரம் நடந்து கொண்டிருக்கும் போது நடுவில் அமைதியாக சிம்பு அமர்ந்து தொழுகை செய்வது போல போஸ்டர் ஒன்றினை பதிவிட்டு அதில் வரும் 21 நவம்பர் 10:44 மணிக்கு மேலும் பல முதல் தோற்றங்கள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். இதை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

தென்னிந்திய மொழிகள், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியானால் அதை ‘பான் இந்தியா பிலிம் என்று அழைக்கிறார்கள். 'கே.ஜி.எஃப்' அப்படியொரு படம்தான்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.