திரைச்செய்திகள்

பேடீ ஜென்கின்ஸ் இயக்கத்தில் பிரிட்டிஷ் நடிகையான கால் கேடோட் நடிக்க, கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் 6 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த சூப்பர்வுமன் படம் ‘வொண்டர் வுமன்’.

அதன் சீகுவெல் கதையாக ‘விரிவாக்கப்பட்ட விண்வெளி’ உலகில் நடக்கும் கதையாக 'வொண்டர் வுமன் 1984' திரைப்படம் 200 மில்லியன் டாலர்கள் பட்ஜெட்டில் வார்னர் பிரதர்ஸ் உருவாக்கியிருக்கிறது கடந்த ஜூன் மாதம் வெளியாகவிருந்த 'வொண்டர் வுமன் 1984', டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.கோரோனா பரவல் காரணமாக உலகின் அனைத்து நாடுகளிலும் திரையரங்குகள் மூடப்பட்டதால் 'வொண்டர் வுமன் 1984' உள்ளிட்ட பல்வேறு பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் வெளியீடுகள் ஒத்திவைக்கப்பட்டன.

ஆனால், 'டெனட்' திரைப்படத்துக்குத் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததைத் தொடர்ந்து தயாரிப்புத் தரப்பான வார்னர் பிரதர்ஸ், ‘வொண்டர் வுமன் 1984' வெளியீடு குறித்து மறு பரிசீலனை செய்ய ஆரம்பித்தது. முடிவில், ஓடிடி, திரையரங்குகள் என இரண்டிலும் ஒரே நாளில் படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குநர் பேடீ ஜென்கின்ஸ், "ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் தாண்டி நம்மிடம் இருக்கும் எந்தவிதமான அன்பையும், மகிழ்ச்சியையும் பகிர நாம் முடிவெடுக்க வேண்டும். எங்கள் ரசிகர்களைப் போலவே எங்கள் திரைப்படத்தையும் நாங்கள் விரும்புகிறோம். அது இந்த விடுமுறைக் காலத்தில் உங்களுக்குச் சிறு சந்தோஷத்தையும், ஆறுதலையும் தரும் என நம்புகிறோம்" என்று கூறியுள்ளார். மேலும் “சர்வதேச அளவில் திரையரங்குகள் எங்கெல்லாம் திறக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் டிசம்பர் 16ஆம் தேதி அன்று ‘வொண்டர் வுமன் 1984’ வெளியாகும்” என வார்னர் பிரதர்ஸ் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் சீனாவில் டிசம்பர் 25ஆம் தேதி அன்று 'வொண்டர் வுமன் 1984' வெளியாகிறது. சீனாவில் முதல் பாகம் 90 மில்லியன் டாலர்களையும் இந்தியாவில் 30 மில்லியன் டாலர்களையும் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. ஹெச்பிஓ மேக்ஸ் ஓடிடியில் வெளியாகவிருக்கும் இப்படத்து கூடுதல் கட்டணம் எதையும் செலுத்த வேண்டியதில்லை என ஓடிடி தளம் அறிவித்துள்ளது.

வொண்டர் வுமன் படத்தின் ட்ரைலரைக் காண:

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.

நடிகர் பிருத்திவிராஜை தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கு அறிவார்கள். காரணம் நேரடித் தமிழ்ப் படமான, கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானார்.

தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.