வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமட்சி தயாரிப்பில் ‘மாநாடு’ படத்தில் நடிக்கத் தொடங்கினார்.
பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் இந்தப் படத்தில், வில்லால எஸ் ஜே சூர்யா, கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்து வந்தனர். சுமார் 5 ஆயிரம் துணை நடிகர்கள் கலந்துகொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த இடைவேளையில் ‘ஈஸ்வரன்’ என்ற படத்தில் நடித்து முடித்தார் சிம்பு. தற்போது மீண்டும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.
சிம்புவின் அனல் பறக்கும் ‘மாநாடு’ முதல் தோற்றம்!
மாநாடு திரைப்படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்தின் பெயர் அப்துல் காலிக் என்பதாகும். இந்நிலையில் படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வெளியானது. ஆனால் அதில் முகம் மறைக்கப்பட்டிருந்தது. இன்று அப்படத்தின் மற்றுமொரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முகத்தை மட்டும் காட்டும் சிம்பு ஏதோ பல காரண காரியங்கள் நிறைந்த அழுத்தத்தை வெளிக்காட்டும் வகையில் உள்ளது.
விஜய்க்குப் போட்டியாக சிவகார்திகேயன் - சிம்பு!
சிம்பு படத்தில் நெகிழிப் பாம்பு!
இதேவேளை; தயாராகிவரும் சிம்புவின் மற்றுமொரு திரைப்படமான ஈஸ்வரன் டீசர் வெளியாகி பிரபலமாகிவருகிறது. பழைய சிம்புவாக திரும்பிவிட்டார் என சிம்பு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவருகிறார்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்