ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் தயாரிப்பை லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் தற்போது நிறத்தி வைத்துள்ளது.
படப்பிடிப்பில் நடந்த விபத்தைத் தொடர்ந்து கொரோனா லாக் டவுன் வந்ததால் மார்ச் மாதமே இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இன்றுவரையிலும் மீண்டும் துவங்க முடியாமல் இருந்துவருகிறது. விபத்தில் இறந்தவர்களுக்கு கமலும் லைகாவும் இழப்பீடு வழங்கிய நிலையில், படம் குறித்து வதந்திகள் மட்டுமே வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் கமலுக்கு இதில் நடிக்க ஆர்வமில்லை என்றும்.. இன்னொரு பக்கம் லைகா நிறுவனத்திற்கும், இயக்குநர் ஷங்கருக்கும் இடையில் மோதல் என்றும் செய்திகள் வெளியாகின.
சசிகலாவின் வாழ்க்கையை படமாக்கும் ராம்கோபால் வர்மா!
ஆனால், இவை அனைத்தும் வதந்திகள் சம்பந்தப்பட்ட மூவரும் தெரிவித்துவிட்டனர். ஆனாலும் படம் இன்னும் ஒரு இன்ச்கூட நகராமல் இருப்பதற்குக் காரணமும் .தெரியாமல் இருக்கிறது. இதற்கிடையில் லைகா நிறுவனத்தில் சமீபத்தில் பெரும் மாற்றமாக ஒட்டு மொத்த நிர்வாகமும் மாற்றப்பட்டிருக்கிறதாம். புதிய நிர்வாகிகள் மற்றும் படத் தயாரிப்பு மேலாளர்கள் அனைவருமே மும்பையில் இருந்து வந்து இறங்கியிருக்கிறார்களாம். இப்போதுதான் தினமும் மீட்டிங், மீட்டிங் என்று இதுவரையிலும் ‘இந்தியன்-2’ படம் உருவானவிதத்தைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறார்களாம்.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் இசைக்குழுவசைச்சேர்ந்த பாடகிக்கு பி.பி.சி கௌரவம்!
இவர்களது ஆலோசனை முழுவதும் முடிவடைந்து அவர்கள் களப் பணிக்குத் தயாரானால்தான் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பை லைகா நிறுவனம் துவக்கும் என்கிறார்கள். இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்ளும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு இன்னும் 50 நாட்கள் ஷூட்டிங் உள்ளது. இது ஜனவரி முதல் வாரத்தில் முடிவடைந்துவிடும். உடனேயே தனது சொந்தத் தயாரிப்பான ‘விக்ரம்-2’ படத்தைத் துவக்குகிறார் கமல்ஹாசன். அத்திரைப்படம் 2021 ஏப்ரல் 14-ல் வெளியாகும் என்று இப்போதே சொல்கிறார்கள். எனவே, ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு எப்போது, என்றைக்கு மீண்டும் துவங்கும் என்பதை நம்மைப் போலவே கமல்ஹாசனும், இயக்குநர் ஷங்கரும்கூட மிக ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையான நிலவரத்தை இனி லைகா அதிகாரபூர்வமாக அறித்தால்தான் உண்டு.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்