திரைச்செய்திகள்

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருந்தது.

போட்டியாளர்களுக்கு தினமும் விதவிதமான டாஸ்க்குகள் தரப்பட்டு அவர்களிடையே தீவிரவாதமான வாய்ச் சண்டை வாக்கு வாதங்கள் நடைபெற்று வருகின்றன. போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கும் பிக்பாஸுக்கே சமீபத்திய புயலும் வெள்ளமும் சவாலைத் தந்துவிட்டது.

நிவர் புயலால் கடந்த சில தினங்களாகப் பெய்து வந்த கனமழை காரணமாக சென்னை பூந்தமல்லி ஈவிபி ஸ்டுடியோவில் பிக்பாஸ் வீட்டை பிரம்மாண்டமாக செட் போட்டுள்ளனர். இரும்புப் பட்டைகள், தூண்களைக் கொண்டும், மரச்சட்டங்கள், பிளாஸ்டர் ஆஃப் பேரீஸ் ஆகியப் பொருட்களைக் கொண்டும் போடப்பட்டது. தற்போது இந்த வீட்டை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட வெள்ளநீர் சூழ்ந்துவிட்டது. வீட்டின் தோட்டப் பகுதி, நீச்சல் குளம் முழுவதும் இடுப்பளவு தண்ணீர் புகுந்து விட்டது. இதனால் கனரக இறைப்பான்களைக் கொண்டு தண்ணீரை இறைத்துக் கொட்டி வருகின்றனர். அப்படியும் தண்ணீர் ஊறிக்கொண்டே இருப்பதால்.. காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத் துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் தண்ணீரை வெளியேற்ற நிகழ்ச்சி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. இதையடுத்து தற்போது முழு வீச்சி தண்ணீர் இறைக்கும் பணி நடந்து வருகிறது.

இதனால் போட்டியாளர்கள் நிம்மதி அடைவதற்கு பதிலாக கலக்கம் அடைந்தனர். இதையடுத்து நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் போட்டியாளர்கள் அத்தனை பேரும் பத்திரமாக நான்கு வாகனங்களில் அதி தீவிரப் பாதுகாப்புடன் பூந்தமல்லி அருகே அமைந்துள்ள பிரபல ஹோட்டலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் நேற்று ஒளிபரப்பாக வேண்டிய காட்சிகளில் பலவற்றை எடுத்து இன்று ஒளிபரப்ப திட்டமிட்டிருக்கிறார்கள். இதுதவிர பழைய காட்சிகள் சிலவற்றை இன்றைய எபிசோடில் இணைத்து ஒளிபரப்பிவிட்டு இன்றைய நாளை சமாளித்துவிடுவார்கள் என்று தொலைக்காட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நீண்ட காலமாக திரைப்பட வாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருந்தார் நமீதா.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

ஊழிக் காலம் என்பது எவ்வாறிருக்கும் என்பதை கண்முன்னே நிகழ்த்தி காட்டியது இந்த 2020. போரில்லாமல், வறட்சியில்லாமல், நெருக்கடிநிலை என்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளும் இல்லாமலும் இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020.

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டுவரும் விஜய் சேதுபதி காணும் பொங்லான இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தாம் புதிதாக நடிக்கவிருக்கும் பட குழுவினருடன் இணைந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடிய செய்தியை அவரே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.