திரைச்செய்திகள்

தென்னிந்திய மொழிகள், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியானால் அதை ‘பான் இந்தியா பிலிம் என்று அழைக்கிறார்கள். 'கே.ஜி.எஃப்' அப்படியொரு படம்தான்.

அந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ். தற்போது 'யுவரத்னா' மற்றும் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' ஆகிய படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது. ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனத்தின் அதிபர் கிரகண்தூர் மற்றும் கே.ஜி.எஃப் படத்தின் இயக்குநர் பிரஷான்த் நீல் ஆகியோர் புதிய பிரம்மாண்ட கூட்டணியை பாகுபலி பிரபாஸுடன் அறிவித்துள்ளனர். இந்தப் படத்தை 600 மதிப்பில் ஐந்து மொழிகளில் தயாரிக்கிறார்கள். இதை இன்று இந்திய நேரம் மாலை 5 மணிக்கு அதிகாரபூர்வமான முதல் தோற்றத்துடன் அறிவிக்க இருக்கிறது இந்த அதிரடிக் கூட்டணி.

தற்போது 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படப் பணிகளில் இருக்கும் பிரஷான்த் நீல், அதை முடித்துவிட்டு பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தின் பணிகளைக் தொடங்க இருக்கிறாராம். இதற்கிடையில் பிரபாஸ் நடித்துவரும் ராதே ஷ்யாம் முடிவடைந்துவிட்டதால் அடுத்து ‘மாகாநடி’ படத்தின் இயக்குநர் அஸ்வின் நாக் இயக்கத்தில் ‘அதி புருஷ்’ படத்தில் ராமன் வேடத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இதுவும் ஐந்துமொழிப் படம். மேலும் இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் கதாநாயகி கீர்த்தி நடிக்கிறார். இவர் கீர்த்தி சுரேஷ் அல்ல. பாகுபலி பிரபாஸ் தனது புதிய செல்ல நாயுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நீண்ட காலமாக திரைப்பட வாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருந்தார் நமீதா.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

ஊழிக் காலம் என்பது எவ்வாறிருக்கும் என்பதை கண்முன்னே நிகழ்த்தி காட்டியது இந்த 2020. போரில்லாமல், வறட்சியில்லாமல், நெருக்கடிநிலை என்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளும் இல்லாமலும் இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020.

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டுவரும் விஜய் சேதுபதி காணும் பொங்லான இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தாம் புதிதாக நடிக்கவிருக்கும் பட குழுவினருடன் இணைந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடிய செய்தியை அவரே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.