கொரோனா பெருந்தொற்று திரிபு வைரஸின் தாக்கம், இரண்டாம் அலையாக ஐரோப்பா நாடுகள் தொடங்கி
உலகம் முழுவதும் பரவி வருவதால் பாதுகாப்பு முகக்கவசத்தின் அவசியத்தை வற்புறுத்தும் விதமாக மாஸ்டர் பட கதாநாயகி மாளவிகா மோகனன் விழிப்புணர்வு காணொளி ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தக் காணொளியில் N95 மாஸ்க் மற்றும் இதர மாஸ்க் வகைகளை வைத்து ஒரு மெழுகுவர்த்தியை அமர்த்த முயற்சிக்கிறார் அதில் காற்று அதிகம் போகும் மாஸ்க்குகள் மெழுகுவர்த்தியை உடனே அமர்த்தி விடுகிறது. தரமான மாஸ்க்குகள் காற்றை வெளியேற்றாமல் சமாளித்துவிடுகிறது.
இதனால் காற்று புகாதமாஸ்க்குகளை பயன்படுத்துவதே கொரோனா எதிர்ப்புக்கு பாதுகாப்பாக இருக்கும் என அவர் சமூக சிந்தனையோடு காணொளியைப் பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது லைக்குகளை தாராளமாக வழங்கி வருகின்றனர்..
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்