திரைச்செய்திகள்

மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் சார்பாக இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் "கட்டில்".

இந்த திரைப்படத்தில் மூன்று தலைமுறைகளின் வாழ்வியலை உணர்த்தும்விதமாக வைரமுத்து எழுதி ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்த பாடலை சித்ஸ்ரீராம் பாடியிருக்கிறார். அமெரிக்கா- கலிபோர்னியாவில் உள்ள அதி நவீன ஒலிப்பதிவு கூடத்தில் சித்ஸ்ரீராம் பாடிய கட்டில் திரைப்படப்பாடல் பதிவு செய்யப்பட்டது. ஸ்ரீகாந்த்தேவா சென்னையில் தனது ஸ்டுடியோவிலிருந்து இணையக்காணொளி மூலம் இந்தப்பாடலை பதிவு செய்தார்.

இதுபற்றி பாடகர் சித்ஸ்ரீராம் கூறியதாவது...கோவிட் காலத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் நான் முதன்முதலாக கட்டில் தமிழ் திரைப்படத்திற்கு பாடியுள்ளேன். ஸ்ரீகாந்த் தேவாவுடன் முதன் முதலாக இந்த பாடல் மூலமாக நான் இணைக்கிறேன். அவரின் இசை நெஞ்சுக்கு நெருக்கமாக, மிக அற்புதமாக வந்திருக்கிறது.

கோவிலிலே எனத்தொடங்கும் இந்த பாடலுக்கான சூழலை மிக அழகாக கவித்துவமான முறையில் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு உருவாக்கியிருக்கிறார். வைரமுத்து அவர்களின் வரிகள் ஆழ்ந்த அர்த்தமுள்ளதாகவும், பிரமிக்க தக்க வகையிலும் அமைந்துள்ளது. இந்த பாடல் பாடிய தருணத்தை நான் மிகவும் மகிழ்ச்சிகரமாக உணர்கிறேன்/ இந்த ஆண்டு எனது ஹிட் பாடலாக கட்டில் திரைப்படப்பாடல் அமையும். இவ்வாறு பாடகர் சித்ஸ்ரீராம் கூறினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா பெருந்தொற்று ஒரளவுக்கு குறைந்திருக்கும் நிலையில் திரையரங்குகள் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இலேசாக வீசிய காற்றில் இலைகள் சலசலத்தன. கூடு திரும்பிய பறவைகளின் குரல்கள் மலரத் தொடங்கிய மாலையை அறிவிக்க, அவற்றின் நடுவே இராசத்தின் குரல் எனக்குக் கேட்டது.

"வேம்பி..!"

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.