திரைச்செய்திகள்

இசையமைப்பாளர் D.இமான் அவர்கள் தமிழ் சினிமாவில் நிகழ்த்தியிருப்பது அசாத்தியமான சாதனை. இசையில் பட்டி தொட்டி முதல், எட்டுதிக்கும் எதிரொலிக்கும் மெகா ஹிட் பாடல்களை தொடர்ந்து தந்து வருகிறார்.

அவரது மெலடி பாடல்கள் மனதை மயக்கும் தன்மை கொண்டவை. அதிரடி பாடல்கள் தமிழகத்தில் அனைத்து வீட்டு விஷேசங்களில் முதலிடம் பெறுபவை. இசையில் தனித்தன்மையுடன் பெரும் வெற்றியை பெற்றிருக்கும் அவர் திரைப்பயணத்தில் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கவுள்ளார். “DI Productions” எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார் D.இமான். இந்நிறுவனத்த்தின் முதல் தயாரிப்பாக “தேங்க் யூ ஜீஸஸ்” ( Thank You Jesus ) எனும் ஆன்மீக ஆல்பம் உருவாகிறது. முழுக்க இயேசு கிறிஸ்துவை போற்றும்படி ஆங்கில மொழியில், ஆன்மீக அன்பர்கள் எழுதி, பாடும் இந்த ஆல்பத்தில் 8 பாடல்கள் அடங்கியுள்ளது.

இது குறித்து இசையமைப்பாளர் D.இமான் கூறியதாவது...

இசையமைப்பாளராக எனது வெற்றிப்பயணம் ரசிகர்களின் அளவற்ற அன்பாலும், ஆதரவாலும் நிகழ்ந்தது. அவர்கள் தான் என் வெற்றியின் பெரும் தூண்கள். அவர்கள் கொண்டிருக்கும் அன்பு, தொடரும் எனும் நம்பிக்கையில் தான் “DI Productions” எனும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளேன். இந்நிறுவனம் சார்பில் முதல் தயாரிப்பாக “தேங்க் யூ ஜீஸஸ்” ( Thank You Jesus ) எனும் ஆன்மீக ஆல்பம் உருவாகிறது. 8 பாடல்கள் கொண்டிருக்கும் இந்த ஆல்பம் முழுக்க இயேசு கிறிஸ்துவை போற்றும்படி ஆங்கில மொழியில், ஆன்மீக அன்பர்கள் எழுதி, பாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்தில் ஆடியோ பங்குதாரராக இணைந்திருக்கும் Divo Music நிறுவனத்தாருக்கு எனது நன்றி. விரைவில் திரை இசை அல்லாத, சுயாதீன ஆல்பங்களை தயாரிக்கவுள்ளோம். அதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

தனது அப்பா மு.க.ஸ்டாலினுடன் இணைந்து தீவிர அரசியல் களத்தில் ஈடுபட்டு வருகிறார் உதயநிதி.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

சென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டிப் பிரிவு உண்டு. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய இந்தப் படவிழா கரோனா காரணமாக பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி நேற்று முடிவரைந்தது, தமிழ் போட்டிப் பிரிவில் மொத்தம் 19 படங்கள் பங்கேற்றன.

சிவகார்த்திகேயனுக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் புதிய திரைப்படமான அயலான் பாடல் அண்மையில் வெளியானது. பாடலில் வருவது போல் பாடலும் வேற லெவல் சகோக்களே!