திரைச்செய்திகள்

பிரபல இயக்குநர், நடிகர், மணிரத்னத்தின் மனைவி என பல அடையாளங்கள் கொண்டவர் சுஹாசினி மணிரத்னம்.

அவர் ‘மார்கழித் திங்கள்’ என்ற புகழ்பெற்ற ஆண்டாள் பாசுரத்தை 8 பிரபலங்களுடன் இணைந்து பாட, கத்தார் நாட்டிலிருந்து ஆன்லைன் வழியாக பதிவு செய்யப்பட்டது. இதுபற்றி சுஹாசினி கூறும்போது:

"தென்னிந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை இன்றைய இளைய சமுதாயத்திற்க்கு மறுஅறிமுகம் செய்யும் முயற்சி இந்ததிருப்பாவையின் முதல் பாசுரம் போன வருடம் ரவிவர்மாவின் ஓவியங்களை நம் தென்னிந்திய பெண்களுடைய படங்களுடன் உருவாக்கியதைப் போலவே இந்த வருடம் தொழில் ரீதிபாடகர்கள் அல்லாத நாங்கள் 8 நடிகர்கள் எங்கள் சொந்தக் குரலில் மார்கழித் திங்கள் என்ற திருப்பாவை முதல் பாசுரத்தை பாடியிருக்கிறோம் பாடியவர்கள் உமா பத்மனாபன் ,ரேவதி, நித்யமேனன், ரெம்யா நம்பீசன், அனு ஹாசன், கனிஹா, ஜெயஶ்ரீ, சுஹாஸினி …. ஷோபனாவின் அபிநயம் பாடலுக்கு மணிமகுடம்.

இந்தப் பாடலை பெரும்பாலோர் எங்கள் தொலைபேசியிலேயே பாடி பதிவு செய்தோம். இவற்றை அற்புதமாக, அமைத்து தொகுத்தவர் சுபஶ்ரீதணிகாசலம். ஒளிப்பதிவு பகத் மற்றும் பாடகிகளும் தங்கள் தொலைபேசியிலேயே ஒளிப்பதிவு செய்தனர். தொகுப்பு கெவின்தாஸ் …கத்தார் நாட்டிலிருந்து தொலைதொடர்பு நிர்வாகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு இந்தப் பாடல். இந்த வருடம் மட்டுமல்லாமல் அடுத்த வருடமும் மார்கழி மாதம் ஒரு பாசுரத்துடன் உங்களை மகிழ்விப்பது எங்கள் நோக்கம்” என்று சுஹாஸினி மணிரத்னம் தெறிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நீண்ட காலமாக திரைப்பட வாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருந்தார் நமீதா.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

ஊழிக் காலம் என்பது எவ்வாறிருக்கும் என்பதை கண்முன்னே நிகழ்த்தி காட்டியது இந்த 2020. போரில்லாமல், வறட்சியில்லாமல், நெருக்கடிநிலை என்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளும் இல்லாமலும் இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020.

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டுவரும் விஜய் சேதுபதி காணும் பொங்லான இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தாம் புதிதாக நடிக்கவிருக்கும் பட குழுவினருடன் இணைந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடிய செய்தியை அவரே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.