திரைச்செய்திகள்

இன்று (ஜனவரி 7) முதல் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.

இதற்காக ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் ஹைதராபாத் போய் சேர்ந்துவிட்டனர். அவர்கள் அனைவருக்குமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் நிகழ்ந்ததுபோல் அலட்சியமாக இருந்துவிடமால் இருக்க பயோ சர்க்கிள் முறையில் படக்குழுவினர் அணி பிரிந்து ஒரே ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான வாகன ஓட்டிகளும் வீட்டுக்குச் செல்லமுடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளனர்.

ஹோட்டல் அறையிலிருந்து படப்பிடிப்புத் தளத்துக்கு வரவேண்டும், படப்பிடிப்பு முடிந்தவுடன் ஹோட்டல் அறைக்குச் செல்லவேண்டும், வேறெங்கும் பயணிக்கக் கூடாது என்று படக்குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், படப்பிடிப்புத் தளத்துக்கு வந்துவிட்டால் பணிகள் அனைத்துமே முடித்துவிட்டுத்தான் வெளியே செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பொன்னியின் செல்வன்' படத்துக்காக 5 பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது தொடர்ச்சியாக 30 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளார் மணிரத்னம். திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெற்றால், இத்துடன் சுமார் 70% படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று படக்குழுவினர் சார்பில் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நீண்ட காலமாக திரைப்பட வாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருந்தார் நமீதா.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

ஊழிக் காலம் என்பது எவ்வாறிருக்கும் என்பதை கண்முன்னே நிகழ்த்தி காட்டியது இந்த 2020. போரில்லாமல், வறட்சியில்லாமல், நெருக்கடிநிலை என்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளும் இல்லாமலும் இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020.

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டுவரும் விஜய் சேதுபதி காணும் பொங்லான இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தாம் புதிதாக நடிக்கவிருக்கும் பட குழுவினருடன் இணைந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடிய செய்தியை அவரே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.