திரைச்செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஐந்துக்கும் அதிகமான படங்கள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்தும் பிஸ்னஸ் ஆகாமல் அப்படியே கிடப்பில் இருக்கிறது.

இன்னொரு பக்கம் தனுஷ் படங்களுக்கும் இதே நிலைதான். குறிப்பாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்துக்கு கடன் பிரச்சினை அதிகமாக இருப்பதால், இந்தப் படத்துக்கு திரையரங்குகள் எடுக்க டெபாசிட் கட்டமுடியாத நிலையில் தயாரிப்பாளர்கள் இருக்கிறாராம்.

இதனால் இந்தப் படத்தை நெட்ஃபிலிக்ஸ் இணையதளத்துக்கு விற்றுவிட்டார் தயாரிப்பாளர். இதனால், திரையரங்கை நடத்துபவர்கள் செம காண்டு ஆகியிருக்கிறார்கள். பொதுவாக பெரிய நட்சத்திரங்கள் நடித்துவரும் படங்களுக்கு சரியான வசூல் தொகை கொடுக்காமல் திரையரங்கினர் ஏமாற்றி வருகின்றனர். சிறு படங்களுக்கோ அவர்கள் திரையரங்கே கொடுப்பதில்லை.

ஹலிதா ஷமீம் இயக்கிய ஏலே படத்துக்கு அப்படியொரு சிக்கலை ஏற்படுத்தியதால், அது வரும் 28-ம் தேதி விஜய் டிவியிலும் பின்னர் ஹாட் ஸ்டார் ஓடிடியிலும் வெளியாகிறது. தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுடன் சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை தேர்தல் முடிந்ததும் நெட்ஃபிளிக்ஸ் ஸ்ட்ரீம் செய்ய இருக்கிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

‘சிந்து சமவெளி’ எனும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் அமலா பால். அதன்பின்னர், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவிம்ன் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

‘வாரணம் ஆயிரம்’ ஷமீரா ரெட்டியை தமிழ் ரசிகர்களால் மறக்கமுடியாது. கௌதம் மேனன் இயக்கத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஷமீரா ரெட்டி.

சிவகார்த்திகேயனுக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் புதிய திரைப்படமான அயலான் பாடல் அண்மையில் வெளியானது. பாடலில் வருவது போல் பாடலும் வேற லெவல் சகோக்களே!