திரைச்செய்திகள்

திறமையும் அதை மேம்படுத்திக்கொள்ள தொடர்ச்சியான தேடலும் இருந்தால் உச்ச நட்சத்திரம் ஆகலாம் என்பதற்கு சிவகார்த்திகேயன் ஒரு சிறந்த உதாரணம்.

எவ்வித சினிமா பின்னணியும் இல்லாத ஓர் எளிய நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்து, தன் கல்லூரி மேடைகளில் பலகுரல் நிகழ்ச்சி செய்யக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிக்காக தனது திறமையை இன்னும் வெளிப்படும்படியாக உழைத்தார். அந்த நிகழ்ச்சியின் டைட்டிலையும் வென்றார். அதுமட்டுமல்ல; அதே தொலைக்காட்சி விரும்பி அழைத்து தனது நிகழ்ச்சிகளுக்கு நட்சத்திரத் தொகுப்பாளராக அமர்த்திக்கொண்டது. அதிலும் தனது முத்திரையைப் பதித்துகொண்ட இவரிடம் ‘கிரவுட் புல்லிங்’ என்கிற மக்களை ஈர்க்கும் சக்தி இருப்பதைக் கண்டு தமிழ்த் திரையுலகம் ஆகர்ஷித்துக் கொண்டது. இன்று விஜய், அஜித்துக்கு இணையான வசூல் சந்தை கொண்டவராக ‘ கோலிவுட் பிரின்ஸ்’ எனவும் ரசிகர்களால் ‘சிவா’ என நெருக்கமாகவும் அழைக்கபடும் சிவகார்த்திகேயனை அவரது தொழில் எதிரிகளும் கூட வியப்பாகப் பார்க்கிறார்கள்.

'மெரினா'வில் தொடங்கிய நடிப்புப் பயணத்தை மிகச் சரியாக திட்டமிட்டு, பொழுதுபோக்குத் தன்மையும் தரமும் இணைந்த கதைகளில் தனது கதாபாத்திரத்துக்காக உழைத்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் முன்னணிக் கதாநாயக நடிகர்களில் ஒருவராக மிளிர்கிறார்.

தமிழக இல்லங்களில் நம்ம வீட்டு பிள்ளையாக, சிறுவர் சிறுமியர் தொடங்கி, பெண்கள், வயதில் மூத்தோர் என அனைத்து வயதுடைய பார்வையாளர்களின் நெஞ்சங்களிலும் குடியிருந்து வரும் ’தமிழ்ச் செல்வன்’ சிவகார்த்திகேயனுக்கு இன்று 36வது பிறந்தநாள்.

இவரது நடிப்பில் வரிசையாக அயலான், டாக்டர் என திரைப்படங்கள் வெளியாவதற்கு காத்திருக்கின்றன. அதனைத் தொடர்ந்து டான் எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார்.

இவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு டாக்டர் திரைப்படத்தில்  ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் ஒன்று வெளியாகிறது. அதற்காக சிவாவின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

‘சிந்து சமவெளி’ எனும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் அமலா பால். அதன்பின்னர், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவிம்ன் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

‘வாரணம் ஆயிரம்’ ஷமீரா ரெட்டியை தமிழ் ரசிகர்களால் மறக்கமுடியாது. கௌதம் மேனன் இயக்கத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஷமீரா ரெட்டி.

சிவகார்த்திகேயனுக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் புதிய திரைப்படமான அயலான் பாடல் அண்மையில் வெளியானது. பாடலில் வருவது போல் பாடலும் வேற லெவல் சகோக்களே!