தமிழ்த்திரையுலகில் அபாரமான குரல்வளம் மிக்கப் பாடகர்கள் நடிகர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது ஐயாயிரம் மேடைகள் கண்ட நடிகர் ஒருவர் திரையிசைப் பாடகராக அரங்கேறுகின்றார்.
விஜய் டிவியின் சுப்பர் சிங்கர் சீசன் 8ல் பங்குகொள்ளும் முத்துச் சிப்பியின் குரல் வளம் பிரமிக்க வைக்கிறது. அவரது குரல் வளம் அருமையாக இருந்த போதும், அவரின் வாழ்க்கை வளம் கிராமங்களுக்குள் குறுகிப் போனதாக பலரும் கூறுகின்றனர். ஆனால் அவரோ கிராமங்களும், தன்மீது பற்றும் பாசமும் கொண்ட கிராமமக்களுமே தான் இந்த நிலைக்கு உயரக் காரணம் என நன்றியோடு நினைவு கூருகின்றார்.
நாடக மேடையின் அனுபவம் அவரது குரலின் உயர்விலும் உச்சத்திலும் தெளிவுறத் தெரிகிறது. தமிழ்த்திரையுலகம் திறமையான ஒரு கலைஞனைக் கண்டுகொள்ளுமா ?