திரைச்செய்திகள்

திரைப்படம் உள்ளிட்ட பொது வாழ்க்கையில் மிகவும் பிரபலமானவர்கள் சிறு நற்செயலைச் செய்தால் கூட, அதைக் கொண்டாடத் தயாராக இருக்கிறார்கள் மக்கள். அதுவே அவர்களது ரசிகர்களோ தொண்டர்களோ செய்தால் அது வெளியுலகத்துக்கு தெரியவதில்லை.

இதோ விஜய் ரசிகர்கள் செய்திருக்கும் இந்த மகத்தான செயல். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் சுண்டன் குறிச்சி. அங்கே 150-க்கும் அதிகமான வீடுகள் இருந்தாலும், ஒரு வீடு மட்டும் கடந்த 10 ஆண்டுகளாக மின் இணைப்பு கொடுக்கப்படாமல் இருந்தது. அந்த வீட்டில் கணவனை இழந்த புஷ்பம் என்ற பெண்மணி தன் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மூதாட்டியுடன் வாழ்ந்து வருகிறார். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி, அதன் மூலம் கிடைத்த சொற்ப வருவானத்தை கொண்டு குழந்தைகளையும் மூதாட்டியையும் கவனித்து வந்த புஷ்பத்தின் வீடு கிராமத்திற்கு ஒதுக்குப்புறமாக இருந்ததால் அங்கு இரண்டு மின் கம்பங்கள் அமைத்து அவர்கள் வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதனிடையே நெல்லை மாவட்ட விஜய் மக்கள் மன்ற இணையதள அணியினர் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெற்றியை கொண்டாடும் விதமாக நலிவடைந்த கலைஞர்கள், தொழிலாளர்களுக்கு தங்களது மன்றத்தின் வாயிலாக உதவிகள் செய்து வந்தனர். இந்நிலையில் அவர்களிடம் ரசிகர் ஒருவர் புஷ்பத்தின் வறுமை குறித்து தகவல் கொடுத்த நிலையில் புஷ்பத்திற்கு உதவ முன்வந்த அவர்கள் கடந்த 75 நாட்களாக மின்வாரியத்திடம் புஷ்பத்தின் வீட்டிற்கான மின் தேவைக்காக போராடியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் செலவிலே புஷ்பத்தின் வீட்டிற்கு மின் இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இதற்கு 40 ஆயிரத்திற்கு மேலாக செலவாகியுள்ளது. இது மட்டுமன்றி புஷ்பத்தின் வீட்டை சீரமைத்து அவர்களுக்கு தேவையான பொருட்களையும் வாங்கிக்கொடுத்துள்ளனர்.

இது குறித்து புஷ்பம் கூறும் போது, “இருட்டாய் இருந்த வீட்டுக்குள் இன்று வெளிச்சம் பிறந்திருக்கிறது. மின் விளக்குகள் எரிகிறது. மிக்சி சத்தத்துடன் இயங்குகிறது. ஃபேன் சுற்றுகிறது. 10 வருடமாக இது எதுவுமே இயங்காமல் இருந்த வீட்டுக்குள் இன்று எல்லாம் இயங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.” என மகிழ்ச்சியுடன் ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளார். உண்மையில் விஜய்யின் ரசிகர்களிலும் மற்றவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்கள் நிறையவே இருக்கிறார்கள் என்பதற்கு இச்செயல் ஒரு எடுத்துக்காட்டு!

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

தெலுங்கு சினிமாவின் மூலம் தமிழ்சினிமாவுக்கு வந்த பஞ்சாபிப் பெண் ரகுல் பிரீத் சிங்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.