திரைச்செய்திகள்

‘சிந்து சமவெளி’ எனும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் அமலா பால். அதன்பின்னர், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவிம்ன் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

இயக்குநர் ஏ.எல்.விஜய் - அமலாபால் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. கடந்த 2016-ல் திருமணம் செய்து கொண்ட இவர்கள், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் மனமொத்து சட்டபூர்வ மணவிலக்கு பெற்று பிரிந்தனர். மணவிலக்கு பெற்ற பிறகு தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அமலா பால். ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பு கூட்டினார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் நடிகை அமலாபால் விவாகரத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது: “நான் விவாகரத்து செய்து பிரிந்தபோது எனக்கு யாரும் ஆதரவு தரவில்லை. எல்லோரும் என்னை பயமுறுத்த முயற்சி செய்தனர்.

நான் முன்னணி நடிகையாக இருந்தபோதிலும் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது எனது மனநிலை பற்றியோ, எனது மகிழ்ச்சியான வாழ்க்கை பற்றியோ யாரும் கவலைப்படவில்லை'' எனத் தெரிவித்துள்ளார். தற்போது ‘யூடேர்ன்’படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான பவன்குமார் இயக்கத்தில் வெப்சீரீஸ் நடித்துவருகிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சிவகார்த்திகேயன் - இயக்குநர் நெல்சன் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள்.
தலைவாசல் அறைக்குள்ளிருந்து கேட்ட அவள் அனுங்கலில் “வேம்பி..!”

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் மோடி பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று #reginmodi என்கிற ஹேஷ் டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.

நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மாசாடையாமால் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் திகதி புவி தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.