திரைச்செய்திகள்

‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், தனது 65-வது படத்தில் நடிக்கிறார் தளபதி விஜய். சன் டிவி தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை சன் டிவி அலுவலகத்தில் இன்று நடந்தது.

இதில் விஜய், தலை நிறைய முடியும் தாடி மீசையும் வைத்துக்கொண்டிருந்தார். சண்டைப் பயிற்சியாளர் அன்பறிவ் இரட்டையர் உட்பட படத்தின் உருவாக்கத்தில் பங்குகொள்ளும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். இன்று தொடங்கி அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது

அதைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். அனிருத் இசையில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்தப் படத்தின் பூஜையில் கதாநாயகி பூஜா ஹெக்டே கலந்துகொள்ளவில்லை.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சிவகார்த்திகேயன் - இயக்குநர் நெல்சன் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள்.
தலைவாசல் அறைக்குள்ளிருந்து கேட்ட அவள் அனுங்கலில் “வேம்பி..!”

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் மோடி பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று #reginmodi என்கிற ஹேஷ் டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.

நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மாசாடையாமால் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் திகதி புவி தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.