ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் காட்சிகளுக்கு உலகெங்கிலும் வரவேற்பு இருக்கவே செய்கிறது.
கொரியன் படமான ஓல்டு பாய் (Oldboy), மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்ற 1917, புகழ்பெற்ற தி ரெவனெண்ட் (The Revenant), தி ரைட் (The Raid) என பல படங்களில் ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட ஆக்ஷன் காட்சிகளுக்காக அவை சினிமா ஆர்வலர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டுள்ளது. அதுபோன்ற ஒரு முயற்சியை அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தில் செய்துள்ளனர். ரசிகர்களை வாய்பிளக்க வைக்கும் ஆக்சன் காட்சியாக, இக்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சாம் ஆண்டன் இதுகுறித்து கூறும்போது: “ இப்படியொரு ஷாட் எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள், கனவு முயற்சி. நானும் திலீப் சுப்பராயன் மாஸ்டர் அவர்களும், பல காலம் முன்பாகவே, இப்படி ஒரு ஆக்ஷன் காட்சியை எடுக்க திட்டமிட்டோம். இப்படத்தில் அந்த கனவு நிறைவேறியுள்ளது. அதுவும் சுறுசுறுப்பும், உத்வேகமும் நிறைந்த நடிகர் அதர்வா முரளி போன்ற நாயகன் அமைந்ததால் தான் இது சாத்தியமானது. சிங்கிள் ஷாட்டில் ஒரு ஆக்சன் காட்சியை திட்டமிட்டு எடுப்பது மிக சவாலானதாக இருந்தது. திட்டமிட்ட பிறகு ஒரு நாள் மட்டுமே நாங்கள் ரிகர்சல் செய்தோம். படக்குழுவினரின் அர்ப்பணிப்புடன் கூடிய அயராத உழைப்பால் இக்காட்சி அற்புதமாக வந்துள்ளது. இப்படத்திற்கு பிறகு அதர்வா இந்திய அளவில் புகழ்மிக்க நடிகராக மாறிவிடுவார்.” ரிஸ்க்கை ரஸ்க் போல சாப்பிடக் கூடியவர் என்கிற ரீதியில் பாராட்டியுள்ளார் இயக்குநர்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்