திரைச்செய்திகள்

சன் டிவி தயாரிப்பில், தளபதி விஜய் நடிக்க, 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் தளபதி 65-வது படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

அதில் யார் யார் முக்கியமாக நடிக்கிறார்கள் என்ற தகவல் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே பூஜைக்கு வராமல் நேரே ரஷ்யாவில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்.

இந்நிலையில், விஜய்யின் 65-வது படத்தின் முக்கிய தகவல் ஒன்று நமக்குக் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸ், விஜய்க்கு மற்றொரு ஜோடியாக அதாவது இரண்டாவது நாயகியாக நடிக்கிறார். அவர் இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு கொடுத்தப் பேட்டியில், “நான் தளபதி 65 படத்தில் நடிக்கிறேன். படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. ஆனால் நான் நடிக்கும் காட்சிகள் மே மாதம் தான் படமாக்கப்படவிருக்கின்றன. எனக்கு விஜய்யை நேரில் பார்ப்பது என்பது கனவாக இருந்தது. படத்தின் பூஜையின் போது அவரை சந்தித்தேன். மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார். இனி இதுபோல் ஒவ்வொரு தகவலாக கசியத் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சிவகார்த்திகேயன் - இயக்குநர் நெல்சன் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள்.
தலைவாசல் அறைக்குள்ளிருந்து கேட்ட அவள் அனுங்கலில் “வேம்பி..!”

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் மோடி பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று #reginmodi என்கிற ஹேஷ் டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.

நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மாசாடையாமால் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் திகதி புவி தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.