திரைச்செய்திகள்

பாகுபலி இரண்டாம் பாகத்துக்குப் பின்னர், இந்திய சுதந்திரப் போராட்டத்தைக் கதைக் களமாகக் கொண்டு ‘ஆர்.ஆர்.ஆர்’படத்தை இயக்கி வருகிறார் ராஜமெளலி. இப்படத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், தேவ்கன், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் பீம் கதாப்பாத்திரத்தின் டீசர்,, ராம் சரண் நடிக்கும் ராமராஜு கதாப்பாத்திரத்தின் டீசர், ஆலியா ஏற்றுள்ள ‘சீதா’ கதாபாத்திரத்தின் முதல் தோற்றம் போன்றவை ஏற்கெனவே வெளியாகிவிட்டன.

இந்நிலையில் நிலையில், இன்று அஜய் தேவ்கனின் 58-வது பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் மோஷன் போஸ்டர் டீசரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. ஆனால், அவர் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரை வெளியிடவில்லை.

டீசரில் துப்பாக்கியுடன் பிரிட்டிஷ் போலீஸ் வீரர்கள் துப்பாக்கி முனையில் அவரை சுற்றி வளைக்க நடுவில் ஆக்ரோஷமாய் வெளிப்படும் அஜய் தேவ்கனின் உடையும் தோற்றமும் அவரது ரசிகர்களைக் கொண்டாட வைத்திருக்கிறது. இப்படியொரு நல்ல பிறந்த நாள் பரிசு கொடுத்ததற்காக இயக்குநர் ராஜமௌலிக்கு தனது சமூக வலைதளத்தில் நன்றி கூறியிருக்கிறார் அஜய் தேவ்கன். இதோ அந்த அசைவூட்ட முன்னோட்டம்!

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சிவகார்த்திகேயன் - இயக்குநர் நெல்சன் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள்.
தலைவாசல் அறைக்குள்ளிருந்து கேட்ட அவள் அனுங்கலில் “வேம்பி..!”

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் மோடி பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று #reginmodi என்கிற ஹேஷ் டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.

நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மாசாடையாமால் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் திகதி புவி தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.