தமிழக வாக்காளர்களை திசை திரும்பும் விதமாகவே ‘அசுரன்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களுக்கும் தேசிய விருதுகளை இம்முறை விருதுகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள் என்று விமர்சனம் சமூக வலைதளங்களில் தூள் பறந்தது.
தேர்தலையொட்டிதானே அசுரனுக்கு விருது கிடைத்தது என்று ஒரு பத்திரிகையாளர் அசுரன் விருதுவிழா பிரஸ்மீட்டில் வெற்றிமாறனைக் கேட்டார். மைக்கை ஆஃப் செய்துவிட்டு, ‘இந்த நிகழ்ச்சி முடிந்ததும் உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன்’ என்று சொல்லிவிட்டு மைக்கை ஆன் செய்து மற்ற கேள்விகளுக்கு பதில் சொன்னார் வெற்றிமாறன்.
அதேபோல நிகழ்ச்சி முடிந்ததும் அந்த செய்தியாளர் காத்துக்கொண்டிருந்தார். அவர் அருகில் வந்த வெற்றிமாறன். ‘அசுரன் விருதுக்குரிய படமாக இருந்தது.. அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. தேர்தல் வந்திருக்காவிட்டாலும் வேறு கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஒரு விருதாவது அசுரனுக்கு வந்திருக்கும். இதை நாங்கள் அதிர்ஷ்டம் என்று எடுத்துக்கொள்கிறோம். ஆனால் இதையெல்லாம் எப்படி வெளிப்படையாக சொல்லமுடியும். பிறகு எப்படி நாங்கள் படங்கள் எடுக்கமுடியும் நீங்களே சொல்லுங்கள்’ என்று பதில் சொல்லிவிட்டுப்போனார். செய்தியாளரோ செய்வதறியாது திகைத்து நின்றார்.
இந்த நிகழ்வு ஒருபுறமும் இருக்க வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிக்கவுள்ள படத்துக்கு ‘விடுதலை’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதே தலைப்பில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு திரைப்படம் (1986-ல்) வெளிவந்துள்ளது. எனவே, தலைப்பைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டு, அத்திரைப்பட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார் வெற்றிமாறன். அனுமதி கிடைத்ததும் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்களாம் அனுமதி கிடைக்காவிட்டால் வேறு தலைப்பை தேட வேண்டியிருக்கும் என்கிறது வெற்றிமாறன் தரப்பு.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்