இந்தியாவில் கோரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையானது முதல் அலையைவிட மிக வேகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நாளைக்கு இந்தியாவில் 1 லட்சத்தில் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் நாளொன்றுக்கு 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஒருபக்கம் தடுப்பூசி போடும் பணி ஒருபுறம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இத்தனைக்கும் நடுவில் திரைபிரபலங்கள் பலரும் தாங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை அவர்களே தங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மும்மையில் வசித்துவரும் ரன்பீர் கபூர், அமீர் கான், ஆலியா பட் என பாலிவுட் பிரபலங்களும் பலர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மாதவனும் கொரோனாவால் பாதிக்கப்பபட்டார். அதை அவரே தெரிவித்தும் இருந்தார். தற்போது மீண்டும் கொரோனா நிலவரத்தைப் பதிவிட்டுள்ள அவர், தன்னால் தனது குடும்பத்தில் உள்ள மனைவி, மகன், அப்பா, அம்மா ஆகியோர் தொற்றுக்கு ஆளாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோவில் அப்துல் கலாமுடன் ஒரே பேச்சில் விஞ்ஞானியாகப் பணியாற்றிய நம்பி நாராயணன் மீது நாட்டின் பாதுகாப்பு விஷயங்களை விற்றுவிட்டதாக பொய் வழக்கு போட்டத்தில் கடும் சித்திரவதைகளை அனுபவித்த அவரது வாழ்க்கையை ‘ ராக்கெட்ரரி’ தலைப்பில் படமாக்கியுள்ளனர். அதில் நம்பி நாராயணனாக மாதவன் நடித்திருந்தார். அந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகி ராக்கெட் வேகத்தில் பிரபலமாகி வரும் நிலையில் அதைவிட வேகமாக மாதவன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொரோனா தாக்கிவிட்டது!