பாண்டிச்சேரியில் கடந்த 30 நாட்களாக (2-ஆம் ஞாயிறு தவிர்த்து) சிம்புவின் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒருநாள் மட்டும் விடுமுறையை அறிவித்துள்ளார் சிம்பு. தனது வாக்கினைச் செலுத்துவதற்காகவும் படக்குழுவினர் வாக்குகளைச் செலுத்தவும்ம் சிம்பு இந்த விடுமுறையைப் பெற்றுக்கொடுத்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமட்சி தெரிவித்துள்ளார்.
சிம்பு இப்படத்தில் ‘அப்துல் காலிக்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சிம்புவின் நண்பரான யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இதன் முதல் மற்றும் இரண்டாம் தோற்றங்கள் வெளியாகியிருந்த நிலையில் சிம்புவின் பிறந்தநாளையொட்டி மாநாடு டீசரும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
பாண்டிச்சேரியில் சிறப்பு அனுமதியுடன் மாநாட்டில் குண்டு வெடிப்பது போன்ற காட்சிகளை இயக்குநர் வெங்கட்பிரபு படமாக்கினார். இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதமிருக்கும் நிலையில் சென்னையில் நடந்து வரும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே சூர்யா, விஜய் டிவியின் குக் வித் கோமாளி நடிகர் உள்ளிட்டோர் நேற்று படப்பிடிப்பில் பங்குகொண்ட புகைப்படங்களை சிம்பு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.