திரைச்செய்திகள்

கார்த்தி வந்தியத் தேவனாகவும் ஜெயம் ரவி ராஜராஜ சோழனாகவும் நடித்துவரும் வரலாற்றுப் புனைவுச் சித்திரம் ‘பொன்னியின் செல்வன்’.

ஆந்திரத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோதாவரி நதிக்கரையில் இப்படத்தை படம்பிடித்துவந்தார் இயக்குநர் மணிரத்னம். வந்தியத் தேவனாக நடித்துவந்த கார்த்தி, சுல்தான் படத்தின் டப்பிங் பணிக்காக படப்பிடிப்பை இடை நிறுத்தினார் இயக்குநர். ஆனால், 4-ம் கட்டப்படப்பிடிப்பை தொடங்கவிருந்த நேரத்தில் இரண்டாம் அலை கொரோனா தீவிர கொண்டுவிட்டதால் மே மாதம் 5-ம் தேதி வரை படப்பிடிப்பை தள்ளி வைத்துவிட்டாராம் மணிரத்னம்.

இதற்கிடையில் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்தடுத்த நடிக்க வேண்டிய தன்னுடைய இரண்டு படங்களை முடிவு செய்துவிட்டார். முதலில் இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவும், ஜார்ஜ் ஒளிப்பதிவாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘கொம்பன்’ பட இயக்குநர் முத்தையா இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சிவகார்த்திகேயன் - இயக்குநர் நெல்சன் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள்.
தலைவாசல் அறைக்குள்ளிருந்து கேட்ட அவள் அனுங்கலில் “வேம்பி..!”

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் மோடி பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று #reginmodi என்கிற ஹேஷ் டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.

நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மாசாடையாமால் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் திகதி புவி தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.