திரைச்செய்திகள்

இயக்குநர் கே.ஸ்ரீராம் முழுக்க முழுக்க பரதக்கலையை மையமாக வைத்து குமார சம்பவம் என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறார். படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள் , நடனம், தயாரிப்பு, இயக்கம் என்பதோடு மட்டுமில்லாமல் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

பரதம் சம்மந்தமான கதைக்கு இன்றைய அவசியம் என்ன என்பதை இயக்குநர் ஸ்ரீராம் நம்மிடம் தெரிவித்தார்.

நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டியத்துறையில் இருக்கிறேன். என்னுடைய அப்பா பி.கே.முத்து பரதக்கலைஞராக இருந்தவர். ஏழைபடும்பாடு, சுதர்ஸன், மக்களைப் பெற்ற மகராசி, மாங்கல்யம் போன்ற படங்களில் டான்ஸ் மாஸ்டராக இருந்திருக்கிறார். சிவாஜிக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்திருக்கிறார். நானும் இதே துறைக்கு வந்து விட்டேன். இன்றைக்கு சினிமாவில் பரத நாட்டியத்தை மிகவும் மோசமாக சித்தரிக்கிறார்கள். பரதம் கற்றுக்கொண்டால் பெண் தன்மை வந்து விடும் என்ற தவறான ஒரு விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அஜித் நடித்த 'வரலாறு' படத்தில் பரதம் கற்றுக்கொண்டதால் தனக்கு திருமணம் ஆகவில்லை என்பதாக காட்டப்படும். அதே போல 'விஸ்வரூபம்' படத்திலும் கமல்ஹாசன் நாட்டியக்கலைஞராக இருப்பதால் மனைவி வெறுப்பதாக காட்டப்பட்டிருக்கும். பரதம் என்பது புனிதமான விஷயம். அதை இப்படியெல்லாம் சிறுமைப்படுத்துவது பற்றி யாருமே கவலைப் படவில்லை. இந்த விஷயத்தில் கமலும், அஜித்தும் பரதக்கலைக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்றே சொல்வேன்.

இது தொடர்வதைத் தடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இதற்காக நானே 'குமார சம்பவம்' என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறேன். நான் பரதத்தை எளிய மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன். பஞ்சபூதங்கள் பற்றியும், ஐந்திணைகள், நவக்கிரகங்கள் பற்றியும் நாட்டியத்தில் சொல்லி வருகிறேன். கிராமத்துக் காவல் தெய்வங்களான ஏழு முனிகள் பற்றிய நாட்டியத்தையும் ஆடியிருக்கிறேன். கார்கில் போர் நடந்தபோது அதைப் பற்றியும் பரதத்தில் சொல்லியிருக்கிறேன். இந்தப் படத்திற்குப் பிறகு பரதத்தை இனிமேல் யாரும் தவறாக காட்டக்கூடாது. அதுதான் என்னுடைய நோக்கம். படத்தில் என்னோடு நிகிதா மேனன், சாய் அக்‌ஷிதா, மீனாட்சி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் முதல் பிரதி தயாராக இருக்கிறது. விரைவில் வெளியாகும் என்றார் ஸ்ரீராம்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சிவகார்த்திகேயன் - இயக்குநர் நெல்சன் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள்.
தலைவாசல் அறைக்குள்ளிருந்து கேட்ட அவள் அனுங்கலில் “வேம்பி..!”

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் மோடி பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று #reginmodi என்கிற ஹேஷ் டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.

நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மாசாடையாமால் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் திகதி புவி தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.