திரைச்செய்திகள்

ஒவ்வொரு முறை பிரபுதேவா திரையில் தோன்றும் போதும், அது சினிமாவாக இருந்தாலும், பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் அல்லது விளம்பரமாக இருந்தாலும் ரசிகர்களை வசீகரிக்கும் மேஜிக் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

அவரது ஸ்டைல், உடை, தோற்றம் அனைத்தும் நவீனத்தின் முன்னெடுப்பாக, அட்டகாச ஸ்டைலில், அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் அவரது ஸ்டைலிஸ்ட் ஜாவி தாகூர் தான். முன்னணி ஸ்டைலிஸ்ட் மற்றும் டிசைனராக மும்பையில் பணியாற்றி வரும் ஜாவி தாகூர் தான், கடந்த ஏழு வருடங்களாக பிரபுதேவாவின் ஸ்டைலிஸ்ட்டாக பணிபுரிந்து வருகிறார்.

பிரபுதேவாவின் தோற்றத்தை முழுதுமாய் மாற்றியமைத்து, நவீன பாணி ஸ்டைலில் அவரை வடிவமைத்து, அனைவரையும் கவர்ந்துள்ளார். சமீபத்தில் வெளியான “பஹீரா” படத்தின் டீஸரில் பிரபுதேவாவை அவர் வடிவமைத்திருந்த விதம் பெரும் பாராட்டுக்களை குவித்துள்ளது. இது குறித்து ஜாவி தாகூர் தெரிவிக்கும்போது: “நான் புதுமையாக பல விசயங்களை முயற்சித்து பார்க்க பெருந்தன்மையுடன் இடம் தந்த இயக்குநர் ஆதிக் அவர்களுக்கு நன்றி.

இப்படத்தில் பிரபுதேவா ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட, 10 விதமான தோற்றங்களில் தோன்றுகிறார். ஒவ்வொரு தோற்றமும் அதற்குரிய தனித்தனமையுடன் தெரியும்படி வடிவமைத்தோம். ஒவ்வொரு பாத்திரத்தின் தோற்றத்தை, வடிவமைத்தது மிக சவாலானாதாக இருந்தது. இறுதியாக இப்போது டீஸருக்கு குவிந்து வரும் பாராட்டுகள், பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. பிரபுதேவாவுடன் பணியாற்றுவது எப்போதும் அலாதியான அனுபவம். சவாலான பணியாக இருந்தாலும் இனிமையான அனுபவமாக இப்படம் இருந்தது.” என்கிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சிவகார்த்திகேயன் - இயக்குநர் நெல்சன் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள்.
தலைவாசல் அறைக்குள்ளிருந்து கேட்ட அவள் அனுங்கலில் “வேம்பி..!”

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் மோடி பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று #reginmodi என்கிற ஹேஷ் டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.

நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மாசாடையாமால் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் திகதி புவி தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.