திரைச்செய்திகள்
Typography

மக்கள் தங்கள் கையில் உள்ள சில்லறை பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டிய நிலை உள்ளதால், இன்று வெளியாகும் திரைப் படங்களின் வசூல் பாதிக்கும் நிலை  ஏற்பட்டு உள்ளது.

அச்சம் என்பது மடமையடா, ஜி.வி. பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு, வெங்கட் பிரபு இயக்கியுள்ள சென்னை 28 II, ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்துள்ள மீன்குழம்பும் மண்பானையும், விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் ஆகிய 5 படங்கள் ரிலீஸாகின்றன. மக்கள் கையில் உள்ள பணத்தை வைத்து அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவார்களே தவிர படம் பார்க்க செலவு செய்ய நினைக்க மாட்டார்கள்.

இதனால் இன்று  வெளியாகி உள்ள படங்களின் வசூல் பாதிக்கப்படும் நிலை உள்ளது. சிம்புவின் அச்சம் என்பது மடமையடா ஏற்கனவே தாமதமாக ரிலீஸாகும் நிலையில் தற்போது இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அனைவரும் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வது இல்லை என்பது இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்