திரைச்செய்திகள்
Typography

வடிவேலுவுக்கும், சூரிக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்படுகிறது.ஆனால், சூரி வடிவேலுவைப் பற்றி பெருமையாக பேசுவதை பார்த்தால், சும்மா கொழுத்திப் போடுவோம் என்கிற ரீதியில் கிளப்பிவிடப்பட்ட புரளிதான் இது என்றே நினைக்கத் தோன்றுகிறது.

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள கத்திச் சண்டை படம் அடுத்த வெள்ளிக் கிழமை ரிலீஸாக உள்ளது.படத்தில் வடிவேலுவும், சூரியும் சேர்ந்து வருவது போன்ற காட்சிகள் இல்லையாம். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. முந்தைய படங்களில் சூரி தன்னை போன்று நடித்தது வடிவேலுவுக்கு பிடிக்கவில்லையாம். அதனால்தான் அவர் மீது கோபமாம்.ஆனால், இதுவெல்லாம் போகிற போக்கில் கிசு கிசு எழுதுபவர்கள் கொளுத்திப் போடுவது என்பதுபோலவே வடிவேலு சூரியைப் பற்றி பேசவில்லை என்றாலும், சூரி வடிவேலுவைப் பற்றி புகழ்ந்து பேசி சிலாகித்துள்ளதை பார்க்கையில் தோன்றுகிறது.

கத்திச் சண்டை படத்தின் முதல் பாதியில் சூரியும், இரண்டாம் பாதியில் வடிவேலுவும் வருகிறார்களாம். நண்பன் சிவகார்த்திகேயனை போன்றே சூரியும் இந்த படத்தில் பெண் வேடம் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS