திரைச்செய்திகள்
Typography

பிரபல இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம், அஜீத் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படம்.

வேதாளம் படத்தை எழுதி,இயக்கியவர் சிறுத்தை சிவா. இப்போது வேதாளம் படம் தெலுங்கு மொழியில் பவன் கல்யாண் நடிப்பில் மீடுருவாக்கம் பெற உள்ளது.இதற்கு தமிழில் இசை அமைத்தவர் அனிருத்.இவரது இசையில் உருவான ஆளுமா டோலுமா பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்தது. 

இந்நிலையில், தெலுங்கில் இந்த படத்தின் மீடுருவாக்கத்தில் இசை அமைப்பாளர் தமன் இசை அமைக்க உள்ளார்.இவரது இசையில் வேதாளம் படத்தின் தெலுங்கு பதிப்பு எப்படி உருவாகும் என்கிற எதிர்ப்பார்ப்பு முக்கியமாக ஆளுமா டோலுமா பாடலுக்கான எதிர்ப்பார்ப்பு கூடி உள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS