திரைச்செய்திகள்
Typography

நயன்தாராவின் வருங்கால மாமியார் ஒரு போலீஸ் என்பதை ‘நானும் ரவுடிதான்’ படத்தின் மூலமாகவே உணர்த்திவிட்டார் விக்னேஷ்சிவன்.

அந்தப்படத்தில் வரும் விஜய் சேதுபதியின் கேரக்டர் சேஷ்டைகள் யாவும், விக்னேஷின் நிஜ வாழ்க்கையிலிருந்து சுடப்பட்டதுதான். சரி... விஷயத்துக்கு வந்துவிடுவோம். அந்த மாமியார் போலீசை தேடி அவர் வீட்டுக்கே போய் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார் நயன்தாரா. விக்னேஷ் சிவனை தன் பெற்றோரிடம் அறிமுகப்படுத்தி, தனது பாரம்பரிய வீட்டிலேயும் விக்கியின் கால்பட செய்த நயன், இப்போது வருங்கால மாமியார் வீட்டுக்கும் போய், சடங்கை சமன் செய்துவிட்டார். அடுத்தது என்ன? அதுதான் இப்போதைய கேள்வி. ஆனால் நயன்தாராவுக்கு வருகிற சினிமா வாய்ப்புகளை பார்த்தால், நாளும் நட்சத்திரமும், ‘நாலு வருஷங் கழிச்சு வர்றேன் தாயி...’ என்று கிளம்பி போயிருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்