திரைச்செய்திகள்
Typography

பல மாதங்களாக இழுபறியாக கிடந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை ஒருவழியாக ரிலீஸ் செய்துவிட்டார் கவுதம் மேனன்.

மார்க்கெட்டில் ஏழு கோடி வரைக்கும் சம்பளம் வாங்கும் அவர், சொந்தப்படம் எடுக்கக் கிளம்பிய நாளில் இருந்தே மண்டை குடைச்சல். “இந்தாளுக்கு எதுக்குய்யா இந்த வேல? பேசாம யாரையாவது பணம் போட வச்சமா, அந்த தயாரிப்பாளரோட ராத் தூக்கத்தை கெடுத்தமான்னு இல்லாம?” என்று இன்டஸ்ட்ரி விமர்சிக்க, தனது சொந்தப்பட ஆசையை இன்னும் விட்டபாடில்லை அவர். அச்சம் என்பது மடமையடா படம் திரைக்கு வரும் நாளில் கூட அந்தப்பட விளம்பரங்களில் இப்படத்தை எந்த கம்பெனி தயாரிக்கிறது என்கிற பெயர் விபரம் இல்லை. ஏன் இப்படி தயாரிப்பாளர் பெயரைக் கூட போடாம விளம்பரம் பண்றீங்க என்று அவரிடம் நேரிடயாக கேட்டபோது, “போடனும்னு ஆசைதான். ஆனால் யார் எந்த மூலையிலிருந்து கேஸ் போடுவாங்கன்னு தெரியலயே? அதனால்தான்” என்றார் அசால்ட்டாக! கவுதம் ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும சந்தித்த பெரும் பிரச்சனையே சிம்புதான். டப்பிங் பேச வராமல் கடைசி நேரத்தில் டிமிக்கி கொடுத்தவர், “என் சம்பள பாக்கியான ஒரு கோடியை எண்ணி வைங்க. அப்பறம் வர்றேன் பேசறதுக்கு” என்று கூறிவிட்டார். அப்புறமென்ன? எங்கெங்கேயோ பிராண்டி புடுங்கி சம்பளத்தை செட்டில் செய்தாராம் கவுதம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்