திரைச்செய்திகள்
Typography

சுந்தரபாண்டியன் என்ற சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த எஸ்.ஆர்.பிரபாகரன், அடுத்து சறுக்கி விழுந்தது கதர்வேலன் காதலில்.

பாலிட்டிக்ஸ் குடும்பத்துல பொண்ணெடுத்தா பாதி ராத்திரியில மீட்டிங்தான்... என்பதை உதயநிதி மூலமாக உணர்ந்து கொண்ட அவருக்கு, அப்படத்தின் தோல்வி தந்த பாடம் கொஞ்ச நஞ்சமல்ல. அதிலிருந்து மீண்டு வந்த அவர் எப்படியோ சத்யஜோதி பிலிம்ஸ்சில் கமிட் ஆகி, விக்ரம் பிரபு நடிக்கும் முடிசூடா மன்னன் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில்தான் கடந்த வாரம் அந்த களேபரம். படத்தை பல மாதங்களாக இழுத்தடித்து வரும் பிரபாகரன், ‘இன்னும் இருபது நாள் ஷுட்டிங் இருக்கு’ என்று மேலும் இம்சை கொடுத்து வருகிறாராம். இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த வந்தவருக்கு, செம பூஸ்ட் கொடுத்தார்களாம் ஆபிசில்! “எடுத்தவரைக்கும் எடிட் பண்ணி படத்தை முடிச்சுரு. இல்லேன்னா நடக்கறதே வேற...” என்ற மிரட்டல் ஒலிக்க, இயக்குனர் சங்கத்தில் புகார் கொடுக்க கிளம்பியிருக்கிறாராம். எல்லாருமா சேர்ந்து முடிசூடா மன்னனுக்கு கிராப் வெட்டிடுவாங்க போலிருக்கே?

BLOG COMMENTS POWERED BY DISQUS