திரைச்செய்திகள்
Typography

விழா எதுவுமின்றி பைரவா பாடல்கள் வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தளபதி ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்தில் உள்ளனர். 

விஜய் நடித்துள்ள பைரவா படத்தின் பாடல்களை டிசம்பர் 17 ம் திகதி  வெளியிட இருப்பதாக தகவல் உள்ளது. விஜயின் முந்தையப் படங்களான தெறி, புலி போலன்றி, விழா எதுவும் நடத்தப்படாமல் பைரவா பாடல்கள் வெளியிடப்பட உள்ளன என்ற தகவல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.  

ஒட்டுமொத்த திரையுலக நடிகர் நடிகைகள் தங்களது வீடுகளில் வருமான வரித்துறை சோதனை எப்போது நடக்குமோ என்கிற அச்சத்தில் உள்ள நிலையில், பைரவா திரைப்பட குழு அடக்கி வாசிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்