திரைச்செய்திகள்
Typography

ஜெயலலிதா மறைந்த நாளில் நடிகர் அஜித் பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்தார். இதனால் அவரால் ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்த நேரத்துக்கு வர முடியவில்லை. ஆகையால் விமானம், கார் என்று மாற்றி மாற்றி பயணித்து இரவுதான் வந்தார்.

 விமான நிலையத்தில் இருந்து நேராக ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இதனல் அவரை பலர் கிண்டல் செய்து வந்தனர். அதோடு அவர் அங்கு காவல்துறை அதிகாரிகளோடு செல்ஃபி எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வெளியானது. இதை வைத்து தொடர்சியாக கிண்டல் செய்துள்ளனர்.

 இதற்கு நடிகர் சாந்தனு கோபமடைந்து காட்டாமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் ,படப்பிடிப்பில் இருந்ததால் நேரத்துக்கு வர முடியவில்லை. அவர் விமான நிலையத்தில் இருந்து நேராக அடக்கம் செய்த இடத்துக்கு வந்ததை கவனியுங்கள். அதோடு ரசிகர் கேட்டதற்கு இணங்க செல்ஃபி எடுத்துள்ளார்.

 வெளித் தோற்றத்துகு சிரிப்பதும், அழுவது உள்ளுக்குள்ளும் அப்படியே இருக்கும் என்பதில்லை, என்று பதிவிட்டுள்ளார். சாந்தனுவின் இந்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளத்தில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்