அம்மா இருக்கும் போது மட்டுமல்ல, இறந்த பின்பும் சற்றே அச்சம் கலந்த உணர்வோடுதான் இருக்கிறார் விஜய்.
அவரது ஒவ்வொரு பட வெளியீட்டின்போதும், எங்கிருந்தோ ஒரு கல் வந்து விழுந்து, மொத்த கண்ணாடியையும் தட்டி உடைக்கிற பெருந்தொல்லை,
அவருக்கு சிலபல அரசியல் வித்தைகளை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறது.
இந்த நிலையில்தான், அம்மாவின் மறைவு விஜய்யின் தோட்டத்தில் சில வெள்ளரிப் பிஞ்சுகளை விளைவிக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறது கோலிவுட்.
ஆனால், நமக்கெதுக்கு புதுப் புது தெம்பெல்லாம் என்று நினைத்திருப்பார் போல. இன்னும் சில வாரங்களில் நடக்கவிருந்த தனது பைரவா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டாராம்.
“மிக அமைதியாக நடக்க வேண்டும். அட... அதுவும் ஏன் நடக்க வேண்டும்? அப்படியே யூ ட்யூப்ல போட்டுவிட்ருங்க போதும்” என்று கூறிவிட்டாராம்.
BLOG COMMENTS POWERED BY DISQUS