திரைச்செய்திகள்

ஒரு முன்னணி நாளிதழில் ‘ஏழு கோடி சம்பளம் கேட்கிறார் நயன்தாரா’ என்றொரு செய்தி வர,

முதன் முதலாக பேரதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார் நயன்தாரா.

நான்கு கோடி கூட அல்ல. மூன்று கோடிதான் அவரது தற்போதைய சம்பளமாம்.

அதற்குள் நாலு கோடியை மிக்ஸ் பண்ணிவிட்டார்களே என்கிற அதிர்ச்சிதான் அது.

“கொடுத்தா நல்லாதான் இருக்கும்” என்று கமென்ட் அடித்தவர், தமிழ்சினிமாவை பொருத்தவரை நிறைய திட்டங்கள் வைத்திருக்கிறாராம்.

வெகு விரைவில் அவரே சொந்தப்பட நிறுவனம் ஒன்றை துவங்கப் போகிறாராம்.

தற்போது அவர் நடித்து வரும் ‘அறம்’ என்ற படமே கூட, நயன்தாராவின் மறைமுக தயாரிப்புதான் என்று காதை கடிக்கிறது இன்டஸ்ட்ரி.

ஏன் ஒளிந்து ஒளிந்து பார்ப்பானேன்? ஒரேயடியாக வெளியே வந்துவிடலாம் என்பதுதான் அவரது எண்ணம்.

நல்ல விஷயத்துக்கு எதுக்கு முகமூடி? என்பதுதான் அனைவரது காமென்ட்டும்.