திரைச்செய்திகள்

ராதாவின் மகள்களால் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் முடிந்துவிட்டது என்று நினைத்த நேரத்தில்தான்,

வரிசைப்பல் ஜொலிக்க வந்து நின்றார் கீர்த்தி சுரேஷ். இங்குள்ள டாப் ஹீரோயின்களையெல்லாம் தண்ணீர் குடிக்க வைத்தார்.

அவரது ஆதிக்கம், லட்சங்களில் ஆரம்பித்து கோடிகளில் புரண்டு, பல கோடி என்று வளர்ந்து பந்தா காட்டுகிற நேரத்தில், அதே வரிசைப்பல் அழகோடு இன்னொரு வாரிசு என்ட்ரி.

இவர் தன்யா. பிரபல ஹீரோ ரவிச்சந்திரனின் பேத்தி.

சசிகுமார் நடிக்கும் ‘பலே வெள்ளையத் தேவா’ படத்தில் நாயகியாக அறிமுகமான தன்யாவின் பர்பாமென்சுக்கு தமிழ் திரையுலகமே வெயிட்டிங்.

ஆவரேஜ் மார்க் வாங்கினால் கூட, ஆஹா ஓஹோ என்று பாராட்டி, வெள்ளைக் குதிரையில் ஏற்றிவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏன்? கீர்த்தி சுரேஷை அடக்கணுமே, அதுக்குதான்! இப்படிதான் பல்லி முட்டயையெல்லாம் பர்கர் ஆக்குவது. அப்புறம் ஐயய்யோ விலை ஏறிப் போச்சேன்னு கூவறது!