திரைச்செய்திகள்

இளைய தளபதி விஜய் அடுத்து அட்லீ படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது இப்படத்தில் ஒரு பவர்புல் பெண் கதாபாத்திரம் இருக்கிறதாம். இதற்காக நடிகை ஜோதிகாவிடம் இதில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் நடிப்பதாக கூறப்படுகிறது. ஜோதிகா மட்டும் இந்த படத்தில் நடிக்க சம்மதித்துவிட்டால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

தகவல் உறுதியாவதற்குள், 13 வருடம் கழித்து விஜயுடன் இணைந்து நடிக்க உள்ளாரா ஜோதிகா என்ற பரபரப்பில் மூழ்கியிருக்கிறது கோடம்பாக்கம். இந்த படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளிவர உள்ளதாகவும் படப்பிடிப்புகள் வருட தொடக்கத்தில் ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.