திரைச்செய்திகள்

சுமார் பனிரெண்டு கோடி கடனில் இருக்கிறாராம் சசிகுமார்.

அதில் கொஞ்சத்தை அடைக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் ‘பலே வெள்ளையத்தேவா’ படத்தை எடுத்து, சுருட்டியும் கொடுத்துவிட்டார்.

படத்தில் இவரைத் தவிர ஒருவருக்கும் ரசிகர் கூட்டம் இல்லை.

படம் வந்த பின் இருந்த கூட்டத்தையும் விரட்டிவிட்டுவிட்டார் சசி என்பதாகவே முடிந்தது இப்படத்தின் விமர்சனம்.

கொடுமை என்னவென்றால், இந்த பலே வெள்ளையன் சசிகுமாரின் முந்தைய கடனில் மேலும் சில கோடிகளை கூட்டி வைத்துவிட்டு சென்றுவிட்டான்.

தனது படு தோல்வியிலிருந்து மீள, உடனடியாக சசி செய்த வேலை என்ன தெரியுமா?

இயக்குனர் சமுத்திரக்கனியுடன் வெகு நேரம் அமர்ந்து ஆலோசித்ததுதான். கடைசி முடிவு? சுப்ரமணியபுரம் பார்ட் 2 எடுக்கலாமா என்பதுதான். (நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா?)