திரைச்செய்திகள்
Typography

ஆனந்தராஜ், விந்தியா இருவருமே “மினிம்மாவை பிடிக்காது” லிஸ்ட்டில் இருப்பதாக அல்மோஸ்ட் அறிவித்துவிட்டார்கள்.

அதிமுகவுக்கு இதனால் சிறு துரும்பளவு நட்டம் இல்லை என்றாலும், மீடியா சும்மாயிருக்குமா? பேட்டி, கருத்து என்று பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறது.

அப்படியே ஓரமாக உட்கார்ந்திருக்கும் நமீதாவுக்கும் ஒரு போன் அடித்தால், எதிர்முனை சொல்லும் ஒரே கண்டிஷன்.

“என்ன வேணும்னாலும் கேளுங்க. பட்... அதிமுக பற்றியோ, சின்னம்மாவின் புதிய தலைமை பற்றியோ ஒண்ணும் கேட்காதீங்க.

அம்மா இறந்ததிலிருந்தே நான் இன்னும் விடுபடல” என்கிறார்.

“ஏன்மா ஒன்றரை கோடி தொண்டர்களே புது போஸ்டரும், புது கோஷமுமா தயாராகிட்டாங்க.

நீங்க மட்டும் எப்படி?” என்று கேள்வி கேட்கும் முன் எதிர்முனை கட்! கட்சிதான் முக்கியம்னு என்னைக்கு சொன்னாரு நமீதா?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்