திரைச்செய்திகள்
Typography

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் படங்கள் தயாரிக்கிறார் என்று ஒரு அரசல் புரசல் தகவல் இருந்ததல்லவா?

அதை லேசான புன்முறுவலோடு கடந்தார் அவர்.

இல்லை என்று சொல்லாத வரைக்கும் ஆமாம் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்கிற நெறிமுறைகளுக்கேற்ப அந்த செய்தியை ஊதி பெரிதாக்கின ஊடகங்கள்.

ஆனால் அந்த தயாரிப்பு சாதாரண தயாரிப்பல்ல.

அதையும் தாண்டி என்பதுதான் நமக்கு கிடைத்த ரகசிய செய்தி.

யெஸ்... இப்படத்தின் மூலம் இயக்குனர் ஆகிவிட்டார் ரஹ்மான்.

யுனிவர்சல் சப்ஜெக்ட் ஒன்றுடன் துனிஷியா என்ற நாட்டில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் அவர்.

விர்சுவல் ரியாலிடி வகை படம் இது.

அதாவது தமிழில் கோச்சடையான் வந்ததே... அந்த மாதிரி! உலகத்தின் நம்பர் ஒன் கலைஞர்கள் எல்லாம் ரஹ்மானுடன் கை கோர்த்திருக்கிறார்கள்.

அதிகாரபூர்வமான பிரஸ் ரிலீஸ் வரவே ஆறு மாதங்கள் ஆகலாம்.

அப்படின்னா படம் வர? ஒரு வருஷம் கூட ஆகலாம்.

ஆனால் கோச்சடையான் போல இருக்காது என்பதற்கு மட்டும், ஒரு டபுள் ஸ்டிராங்கான உத்தரவாதம் கொடுக்கலாம்! ஏன்?

ரஹ்மான் என்றாலே புதுமை. முழுமையாச்சே!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்