திரைச்செய்திகள்
Typography

லாரன்ஸ் ஹீரோவாக நடித்து விரைவில் வெளிவரப்போகும் படம் சிவலிங்கா.

கன்னடத்தில் 100 நாட்களை தாண்டி ஓடிய இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் பி.வாசு.

கன்னடத்திலும் இவரேதான் டைரக்டர். படப்பிடிப்புக்கு வரும் லாரன்ஸை, ஆறு மணிக்கெல்லாம் பேக்கப் சொல்லி அனுப்பிவிடுவாராம் பி.வாசு.

அதிர்ச்சியாகிவிட்டார் லாரன்ஸ். “சார்... என்னோட ஷுட்டிங்கெல்லாம் காலையில் ஏழு மணிக்கு ஆரம்பிச்சு ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் போகும்.

நீங்க என்னன்னா இவ்வளவு ஈசியா எடுக்கிறீங்களே?” என்று பரவசமாகிவிட்டார். “மறுபடியும் நாம ஒண்ணு சேரணும்.

என் கால்ஷீட் எப்ப வேணா உண்டு” என்று கூறியிருக்கிறார். கிட்டதட்ட 100 கோடி கலெக்ஷன் ஹீரோ லிஸ்டில் இருக்கும் லாரன்ஸ் இப்படி சொன்னால், சும்மாயிருப்பாரா பி.வாசு?

மறுபடியும் ஒரு திகில் சப்ஜெக்டோடு கிளம்பியிருக்கிறார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்