திரைச்செய்திகள்
Typography

புரூஸ்லீ படத்தின் ஹீரோயின் க்ரிதி கர்பந்தா, அடிப்படையில் செம அரட்டை கேஸ்!

அப்படத்தின் பிரஸ்மீட்டில் அப்பட்டமாக வெளிப்பட்டது அது.

படத்தின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன், “ நீ பேசும்போது என்னை பற்றியும் நாலு வரி பேசும்மா” என்று கூறினாராம்.

அந்த விஷயத்தை மேடையில் போட்டு உடைத்த க்ரிதி, “அவருக்கு சாப்பாடுன்னா இஷ்டம்.

அதுவும் பிரியாணின்னா நல்லா சாப்பிடுவாரு.

அப்புறம் பொண்ணுங்கன்னா ரொம்ப ரொம்ப இஷ்டம்.

அதே மோட்டிவ்வா இருப்பாரு...” என்று சொல்லிக் கொண்டே போக, ஓடி வந்து அவர் பக்கத்தில் நின்று கையெடுத்து கும்பிட்டார் பிரசாந்த்.

நல்லபடியா நாலு வார்த்தை சொல்ல சொன்னா, இப்படி பொது மேடையில் வச்சு டவுசரை உருவிட்டாரே என்று அவர் அதிர்ச்சியானதை பலரும் கைதட்டி கொண்டாடினார்கள்.

தேங்காய் தலையில் வந்து விழுந்தாலும், “இளசா முத்தலா? இன்னைக்கு சட்னிக்கு ஆவுமா?”ன்னு கேட்கிற ஊர்லதானே இருக்கோம்?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்