திரைச்செய்திகள்

பாட்டும் கூத்துமாக போய் கொண்டிருக்கிறது கே.வி.ஆனந்தின் ‘கவண்’ படப்பிடிப்பு.

படத்தில் விஜய் சேதுபதிதான் ஹீரோ என்றாலும், படம் முழுக்க வருகிற இன்னொரு ஹீரோவாக டி.ராஜேந்தர் இருக்கிறாராம்.

இந்தப்படம் வெளிவந்தால், ஒரு பெரும் கூட்டம் டி.ஆர் வீட்டு வாசலில் அவரது கால்ஷீட்டுக்காக தவம் கிடக்கலாம் என்கிறார்கள்.

புதையல் எடுக்கணும்னா கட்டை விரலை காவு கொடுத்துதானே ஆக வேண்டும்? அப்படியொரு இம்சையையும் சேர்த்து சுமக்கிறாராம் கே.வி.ஆனந்த்.

பாடல் காட்சிகளில் நடன இயக்குனர் சொல்லிக் கொடுக்கிற எதையும் பின்பற்றுவது இல்லை டிஆர். அவர் போக்குக்குதான் ஆடுகிறாராம்.

அதோடு விட்டால் பரவாயில்லை. “யோவ்... இந்த இடத்துல இந்த ஸ்டெப்புக்கு மியூசிக் கரெக்டா வரல.

அதனால் அந்த பையன்ட்ட சொல்லி ட்யூனையும் பீட்டையும் மாத்து” என்கிறாராம்.

என்னடா வம்பா போச்சு? என்று இடிந்து போய் உட்கார்ந்தாலும், பொங்கி வரும் சிரிப்பை அடக்க முடியாமல்தான் ஒவ்வொரு நாளும் கழிகிறதாம் ‘கவண்’ குழுவினருக்கு!

(வருங்கால முதல்வர்னே தெரியாம வம்பு வச்சுக்காதீங்க. ஆமாம்... சொல்லிப்புட்டேன்)