திரைச்செய்திகள்

வடசென்னை படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் தனுஷ்.

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட படம் இது. துவங்குவதற்கே இத்தனை வருஷம் ஆகிவிட்டது.

“ஏன் இவ்ளோ லேட் பண்றீங்க?” என்று கேட்ட மீடியாவிடம், “அது துவங்குனா முடியறதுக்கு இரண்டு வருஷம் ஆகும்.

அந்தளவுக்கு டெடிகேட் பண்ண வேண்டிய படம் அது. அதனால்தான்” என்றார் தனுஷ்.

அந்த நிலைக்கு ஏற்ற மாதிரிதான் துவங்கினார்கள். ஆனால் என்ன காரணமோ, ஒரு ஷெட்யூல் படப்பிடிப்புடன் மூட்டை கட்டி வைத்துவிட்டார்கள்.

ஆமாம்... இதில் முக்கிய ரோலில் நடிப்பதாக இருந்த விஜய் சேதுபதி நிலைமை? “போங்க சார்... நிறைய வேலை இருக்கு.

இனிமே என்னை கூப்பிடாதீங்க” என்று கிளம்பிவிட்டார். தனுஷுக்குதான் வரிசையா படங்கள் இருக்கே? வட சென்னை வடை சென்னையாகி, ஊசிப்போன வடையானால்தான் என்னவாம்?