திரைச்செய்திகள்
Typography

சமீபத்தில் திரைக்கு வந்த துருவங்கள் பதினாறு படத்திற்கு நாலா புறத்திலிருந்தும் சப்போர்ட்!

அப்படியிருந்தும் சில தியேட்டர்களில் சுதி இறங்குகிற சமயம் பார்த்து அடித்தது லக்கி பிரைஸ்.

சற்றே தாமதமாக இப்படத்தை பார்த்த டைரக்டர் ஷங்கர், இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு தன் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து ட்விட் செய்தார்.

அவ்வளவுதான்... காட்டுத் தீ போல விஷயம் பரவியது போலும். தியேட்டரில் 60 சதவீத கூட்டம் மீண்டும் நிரப்ப ஆரம்பித்துவிட்டதாம்.

எல்லாம் சரி. ஆளாளுக்கு கார்த்திக் நரேனை பாராட்டினாலும், டாப் ஹீரோக்கள் யாரும் அவரை தொடர்பு கொண்டு கதை சொல்லுங்க என்று கேட்கவே இல்லை.

பாராட்றது வேற. கால்ஷீட் கொடுக்கறது வேற. கமர்ஷியல் படம் எடுக்கறது வேற. இதுல கடைசி மேட்டர்தான் கவனத்துக்குரியது போலிருக்கு!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்