திரைச்செய்திகள்
Typography

காவேரி பிரச்சனை, சென்னையில் வெள்ளம், பாலசந்தர், பாலுமகேந்திரா மறைவு, நடிகர் சங்க எலக்ஷன், இன்னும் எத்தனையோ அத்யாவசியமான பிரச்சனைகளின் போது கூட, “நான் பேஸ் மாட்டேன்… பேஸ்வே மாட்டேன்” என்று மூச்சை பிடித்துக் கொண்டு இருந்தவர் அஜீத்.

இந்த முறையும் அப்படியே இருந்துவிடலாம் என்று அவர் நினைத்திருந்த நேரத்தில்தான், “அட அண்ணாத்தே… இந்த நேரத்துல கூட நீங்க வாயை திறக்க மாட்டீங்களா?” என்று நமது நியூதமிழ்சினிமா.காம் கேள்வி எழுப்பியது.

“கலெக்ஷைனை மட்டும் பார்த்துட்டு கமுக்கமா இருந்துடலாம்னு நினைச்சா, இப்படி தேடிப்புடிச்சி தேனீயை அவுத்து வுடுறானுங்களே” என்று நினைத்திருக்கலாம். முதலில் ஒரு அறிக்கை மட்டும் வெளியிடலாம் என்று நினைத்தாராம் அஜீத். அந்த நேரத்தில்தான் நடிகர் சங்கம் ஒரு உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தது. ரஜினி கமல் அஜீத் விஜய் கலந்து கொள்வார்கள் என்றும் நிருபர்களிடம் கூறியிருந்தார் பொன்வண்ணன். அப்படியே இந்த தகவலை அஜீத்திடம் பாஸ் பண்ணினார்களாம். “மீடியாக்கள் வருவாங்க. எதையாவது டென்ஷன் ஏத்துற மாதிரி கேள்விகள் கேட்பாங்க. பதில் சொல்லணுமே?” என்று தயங்கியவரிடம், “உங்களுக்கு அந்த பிரச்சனையே வராது. நாங்க மீடியாவை உள்ள விடப்போவதில்லை” என்று கூறிதான் அவரை வரவழைத்ததாம் சங்கம்.

ஆனால் அஜீத் பயந்ததெல்லாம் அநாவசியமானது உள்ளே. கேமிராக்களுக்கு மட்டும் தடைவிதித்த சங்கம், நிருபர்களை அனுமதித்தது. அவர்களும் அஜீத்தை தேடிப்போய் முக்கியத்துவம் தரவில்லை. அதெல்லாம் விட பெரிய அதிசயம் இதுதான். அஜீத், ரஜினி இருவரை பார்த்தாலும் ஓடி ஓடி செல்ஃபி எடுத்துக் கொள்வது சக நடிகர் நடிகைகளின் வழக்கம். நேற்று ஒருவர் கூட அஜீத் அருகில் சென்று செல்ஃபிக்கு கெஞ்சவில்லை.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் ஒரே நேரத்தில் பேய் பிசாசு விலகுச்சு என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்!

New Tamil Cinema . Com

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்