திரைச்செய்திகள்

என் மகள் பீட்டாவின் செயல்பாட்டிலேயே இல்லை. இருந்தாலும் நான் அந்த அமைப்பிலிருந்து விலகச் சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார் த்ரிஷாவின் அம்மா.

இது ஒருபுறமிருக்க, “நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத பந்தலில் த்ரிஷாவை பேச சொல்வோம்.

பீட்டா தொடர்பான விளக்கங்களை அவர் அளிப்பார்” என்று கூறியிருந்தார் நடிகர் சங்கத் தலைவர் நாசர்.

கடைசியில் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்த த்ரிஷாவை பேச வைத்தார்களா என்றால் அதுதான் இல்லை.

மீடியாக்களை உள்ளே அனுமதிக்கவில்லை. “எங்கள் போராட்டமும் பேச்சும் நிஜமான ஹீரோக்களான மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பிவிடக் கூடாது” என்கிற நல்ல சிந்தனையோடு அறிவித்துவிட்டார் நாசர்.

இருந்தாலும் உண்ணவிரதம் முடியும் நேரத்திலாவது அவர் பேச வேண்டும் என்று நினைத்து கேட்டுக்கு வெளியேவே காத்திருந்தது மீடியா கூட்டம்!