திரைச்செய்திகள்

பட்டதாரி படத்தின் ஹீரோயின் அதிதிதான் ஆர்யா ஹீரோவாக நடிக்க, அமீர் இயக்கவிருக்கும்

‘சந்தனத் தேவன்’ படத்தின் ஹீரோயின். ‘நெடுநல்வாடை’ என்ற படத்தில் நடிக்கும் போது அப்படத்தின் இயக்குனருக்கும் இவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு விஷம் குடித்தாரே... அவர்தான் இந்த அதிதி. முதல் இரண்டு படங்களும் எந்த வகையிலும் இவரது சாப்பாட்டு கேரியருக்கு கூட பிரயோஜனம் இல்லை.

இந்த சந்தனத் தேவன்தான் அதிதியின் கேரியருக்குள் கட்டு கட்டாக துட்டை வைக்கப் போகிறது.

இவ்வளவு சந்தோஷத்தோடு ஷுட்டிங்குக்கு காத்திருந்த அதிதிக்கு இப்போது சரியான சடர்ன் பிரேக்! ஆர்யாவுக்கும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கும் நடுவே ஒரு இக்கட்டான இஷ்யூ இருப்பதாலும், படத்தை மதுரையில்தான் எடுத்தாக வேண்டிய நிர்பந்தம் இருப்பதாலும், உடனே நடக்க வேண்டிய ஷுட்டிங்கை ஒரு மாதம் தள்ளி வைத்துவிட்டார் அமீர்.

சினிமாவில் பெரிய நடிகையாகாமல் ஊர் திரும்ப மாட்டேன் என்று பெற்றோரிடம் சவால் விட்டுவிட்டு ஆஸ்டலில் தங்கி நடித்து வரும் அதிதிக்கு இந்த ஒரு மாதம், ஒரு வருஷம் போல நகரும் என்பதை எந்த வார்த்தையால் சொல்லி துக்கப்படுவது?