திரைச்செய்திகள்

போற போக்கில் கொளுத்திப் போடுவது என்பது இதுதான் போலிருக்கு.

சி 3 படத்தின் பிரஸ்மீட்டில் அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு கருத்தை சொன்னார்.

அதாவது “ரஜினிகாந்த், இடத்தை நிரப்பப் போவது சூர்யாதான். ஏன்னா அவருக்கு அவ்ளோ பிசினஸ் இருக்கு” என்று.

இது உண்மையா, பொய்யா என்று ஆராய்வது தனி. ஆனால் இப்படியொரு பாராட்டுரையால் பேரதிர்ச்சிக்கு ஆளானவர் சூர்யாதான்.

“என்னை அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நானெல்லாம் ரொம்ப சின்னப் பையன்” என்றார் தன்னடக்கத்துடன்.

இப்பவே படத்தின் பிசினஸ் 100 கோடி என்று கிளப்பிவிடுகிறார்கள்.

தமிழ்சினிமாவின் வசூல் நிலவரம் முன்பு போல இல்லை. இந்த வருடம் துவங்கிய நாளில் இருந்தே எந்த படமும் பெரிய வசூல் இல்லை.

தப்பித்தோம் பிழைத்தோம் என்று சிறு காயத்துடன் தப்பிய படங்களை கூட விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அப்படியிருக்க... 100 கோடி 200 கோடி என்று பேசுவது, காளை மாட்டுக் கொம்புல சேலையை காய வைச்ச மாதிரி பேராபத்து புண்ணியவான்களே...